وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ
Wassama-i wattariq
வானத்தின் மீதும், (இரவில்) உதயமாகக்கூடியதின் மீதும் சத்தியமாக!
The Nightcommer
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ
Wassama-i wattariq
வானத்தின் மீதும், (இரவில்) உதயமாகக்கூடியதின் மீதும் சத்தியமாக!
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ
Wama adraka ma attariq
(நபியே!) உதயமாகக்கூடியது என்னவென்று நீர் அறிவீரா!
ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ
Annajmu aththaqib
(இதுதான்) இரவெல்லாம் சுடரிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற நட்சத்திரம்.
إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ
In kullu nafsin lamma AAalayha hafith
ஒவ்வொரு மனிதனிடமும் (நம்மால் ஏற்படுத்தப்பட்ட) கண்காணிக்கக் கூடிய ஒரு (வான)வர் இல்லாமலில்லை.
فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ مِمَّ خُلِقَ
Falyanthuri al-insanumimma khuliq
ஆகவே, மனிதன், தான் எதனால் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை கவனிக்கவும்.
خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ
Khuliqa min ma-in dafiq
குதித்து வெளிப்படும் ஒரு துளித் தண்ணீரைக் கொண்டே படைக்கப்பட்டான்.
يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ
Yakhruju min bayni assulbi wattara-ib
அது, முதுகந்தண்டுக்கும் நெஞ்சுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.
إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌ
Innahu AAala rajAAihi laqadir
(இவ்வாறு படைக்கின்ற) அவன் (மனிதன் இறந்தபின் உயிர் கொடுத்து) அவனை மீளவைக்கவும் நிச்சயமாக ஆற்றலுடையவன்ன!
يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ
Yawma tubla assara-ir
என்றைய தினம் எல்லா மர்மங்களும் வெளிப்பட்டுவிடுமோ,
فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ
Fama lahu min quwwatin wala nasir
(அன்றைய தினம்) மனிதனுக்கு ஒரு சக்தியும் இருக்காது. உதவி செய்பவனும் இருக்க மாட்டான்.
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ
Wassama-i thati arrajAA
மழை பொழியும் வானத்தின் மீது சத்தியமாக!,
وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ
Wal-ardi thati assadAA
(புற்பூண்டுகள் முளைக்க) வெடிக்கும் பூமியின் மீதும் சத்தியமாக!
إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌ
Innahu laqawlun fasl
மெய்யாகவே இது (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கக்கூடிய சொல்லாகும்.
وَمَا هُوَ بِٱلْهَزْلِ
Wama huwa bilhazl
இது வீண் பரிகாசமா(ன வார்த்தைய)ல்ல.
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا
Innahum yakeedoona kayda
(நபியே!) நிச்சயமாக அவர்கள் (உமக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்கிறார்கள்.
وَأَكِيدُ كَيْدًا
Waakeedu kayda
நானும் (அவர்களுக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்வேன்.
فَمَهِّلِ ٱلْكَـٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا
Famahhili alkafireena amhilhum ruwayda
ஆகவே, இந்நிராகரிப்பவர்களுக்கு (அது வரை) நீர் அவகாசமளிப்பீராக. (அதிகமல்ல;) ஒரு சொற்ப அவகாசம் அவர்களுக்கு அளிப்பீராக.