أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
Alam nashrah laka sadrak
(நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா?
The Relief
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
Alam nashrah laka sadrak
(நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா?
وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ
WawadaAAna AAanka wizrak
உமது சுமையையும் உம்மைவிட்டும் நாம் இறக்கிவிட்டோம்.
ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ
Allathee anqada thahrak
அது, உமது இடுப்பையே முறித்துக் கொண்டிருந்தது.
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
WarafaAAna laka thikrak
உமது கீர்த்தியையும் நாம் உயர்த்தினோம்.
فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا
Fa-inna maAAa alAAusri yusra
நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.
إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا
Inna maAAa alAAusri yusra
மெய்யாகவே சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.
فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ
Fa-itha faraghta fansab
ஆகவே, (மார்க்கப் பிரச்சாரத்திலிருந்து) நீர் விடுபட்டதும், (இறைவனை வணங்குவதற்கு) சிரத்தை எடுப்பீராக.
وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب
Wa-ila rabbika farghab
மேலும், (துன்பத்திலும் இன்பத்திலும்) உமது இறைவனையே நீர் நோக்கி நிற்பீராக!