ٱلْقَارِعَةُ
AlqariAAa
(மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்!
The Calamity
ٱلْقَارِعَةُ
AlqariAAa
(மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்!
مَا ٱلْقَارِعَةُ
Ma alqariAAa
(அத்தகைய) திடுக்கிடச் செய்யும் சம்பவம் என்ன?
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ
Wama adraka ma alqariAAa
(நபியே!) திடுக்கிடச் செய்யும் சம்பவம் இன்னதென்று நீர்அறிவீரா?
يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ
Yawma yakoonu annasu kalfarashialmabthooth
அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள்.
وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ
Watakoonu aljibalu kalAAihnialmanfoosh
கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும்.
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ
Faamma man thaqulat mawazeenuh
எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ,
فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ
Fahuwa fee AAeeshatin radiya
அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார்.
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ
Waamma man khaffat mawazeenuh
எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ,
فَأُمُّهُۥ هَاوِيَةٌ
Faommuhu hawiya
அவன் தங்குமிடம் ஹாவியாதான்.
وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ
Wama adraka ma hiya
அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீர் அறிவீரா?
نَارٌ حَامِيَةٌۢ
Narun hamiya
(அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்.