وَٱلْفَجْرِ
Walfajr
2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!
The Dawn
وَٱلْفَجْرِ
Walfajr
2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!
وَلَيَالٍ عَشْرٍ
Walayalin AAashr
2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!
وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ
WashshafAAi walwatr
ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும், சத்தியமாக!
وَٱلَّيْلِ إِذَا يَسْرِ
Wallayli itha yasr
நிகழ்கின்ற இரவின் மீது சத்தியமாக! (கேள்வி கணக்கு கேட்கும் நாள் வந்தே தீரும்).
هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌ لِّذِى حِجْرٍ
Hal fee thalika qasamun lithee hijr
இதில் அறிவுடையவர்களுக்கு (நம்பிக்கையளிக்கக்கூடிய) பெரியதொரு சத்தியம் இருக்கிறது.
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
Alam tara kayfa faAAala rabbuka biAAad
7. (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ
Irama thati alAAimad
7. (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَـٰدِ
Allatee lam yukhlaq mithluha fee albilad
அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை.
وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ
Wathamooda allatheena jaboo assakhrabilwad
இன்னும், ஸமூத் என்னும் மக்களை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?) இவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து, (அதில் வசித்துக்) கொண்டிருந்தார்கள்.
وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ
WafirAAawna thee al-awtad
இன்னும், (இராணுவங்களையுடைய) ஆணிக்கார ஃபிர்அவ்னை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்க வில்லையா?)
ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَـٰدِ
Allatheena taghaw fee albilad
இவர்களெல்லாம் பூமியில் வரம்பு மீறியே நடந்தார்கள்.
فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ
Faaktharoo feeha alfasad
(பூமியில்) அவர்கள் மிக்க அதிகமாகவே விஷமம் செய்து கொண்டிருந்தனர்.
فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ
Fasabba AAalayhim rabbuka sawtaAAathab
ஆதலால், உங்கள் இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைக்கொண்டு (அடி மேல் அடி) அடித்தான்.
إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ
Inna rabbaka labilmirsad
நிச்சயமாக உமது இறைவன் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்த வண்ணமாக இருக்கிறான்.
فَأَمَّا ٱلْإِنسَـٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ
Faamma al-insanu itha maibtalahu rabbuhu faakramahu wanaAAAAamahu fayaqoolu rabbeeakraman
ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகிறான்.
وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَـٰنَنِ
Waamma itha ma ibtalahufaqadara AAalayhi rizqahu fayaqoolu rabbee ahanan
ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகிறான்.
كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ
Kalla bal la tukrimoonaalyateem
(விஷயம்) அவ்வாறல்ல. நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை.
وَلَا تَحَـٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ
Wala tahaddoona AAala taAAamialmiskeen
ஏழைகளுக்கு உணவு(ம் வாழ்வாதாரமும் நீங்கள் அளிக்காததுடன் மற்ற எவரையும்) அளிக்கும்படி தூண்டுவதில்லை.
وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًا لَّمًّا
Wata/kuloona atturatha aklanlamma
பிறருடைய சொத்துக்களை உங்கள் சொத்துடன் சேர்த்து புசித்துவிடுகிறீர்கள்.
وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّا جَمًّا
Watuhibboona almala hubbanjamma
மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கிறீர்கள்.
كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّا دَكًّا
Kalla itha dukkati al-ardudakkan dakka
அவ்வாறல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் சமயத்தில்,
وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّا صَفًّا
Wajaa rabbuka walmalaku saffansaffa
உமது இறைவனும் வருவான். வானவர்களும் அணிஅணியாக வருவார்கள்.
وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ
Wajee-a yawma-ithin bijahannamayawma-ithin yatathakkaru al-insanu waannalahu aththikra
அந்நாளில் (பாவிகளுக்காக) நரகம் கொண்டுவரப்படும். அந்நாளில் மனிதனுக்கு நல்லறிவு உதயமாகும். எனினும், அப்போது (உதயமாகின்ற) அறிவால் அவனுக்கு என்ன பயன்?
يَقُولُ يَـٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى
Yaqoolu ya laytanee qaddamtu lihayatee
‘‘என் வாழ்க்கையில் நான் (ஒரு) நன்மையைச் செய்து வைத்திருக்க வேண்டுமே!'' என்று புலம்புவான்.
فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌ
Fayawma-ithin la yuAAaththibuAAathabahu ahad
அந்நாளில் (பாவிகளை) அவன் செய்யும் வேதனையைப் போல் மற்றெவனும் (எவரையும்) செய்யமாட்டான். (அவ்வளவு கடினமாக அவன் வேதனை செய்வான்.)
وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌ
Wala yoothiqu wathaqahu ahad
(பாவிகளை) அவன் கட்டுவதைப்போல் பலமாக மற்ற எவனுமே கட்டமாட்டான். (அவ்வளவு பலமாக அவன் கட்டுவான்.)
يَـٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ
Ya ayyatuha annafsualmutma-inna
(எனினும், அந்நாளில் நல்ல மனிதனை நோக்கி) “நிம்மதிபெற்ற ஆத்மாவே!
ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً
IrjiAAee ila rabbiki radiyatanmardiyya
நீ (இறைவனைக் கொண்டு) திருப்தியடைந்ததாக! (இறைவனால் நீ) திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பச் செல்!'' (என்றும்)
فَٱدْخُلِى فِى عِبَـٰدِى
Fadkhulee fee AAibadee
‘‘நீ என் நல்லடியார்களில் சேர்ந்து,
وَٱدْخُلِى جَنَّتِى
Wadkhulee jannatee
என் சொர்க்கத்திலும் நீ நுழைந்துவிடு'' (என்றும் கூறுவான்).