عَبَسَ وَتَوَلَّىٰٓ
AAabasa watawalla
(நம் நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?)
He Frowned
عَبَسَ وَتَوَلَّىٰٓ
AAabasa watawalla
(நம் நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?)
أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ
An jaahu al-aAAma
தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக.
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
Wama yudreeka laAAallahu yazzakka
(நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீர் அறிவீரா?
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ
Aw yaththakkaru fatanfaAAahu aththikra
அல்லது அவர் நல்லுணர்வு பெறுவார். (உமது) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீர் அறிவீரா? அவ்வாறிருக்க, அவரை நீர் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்?)
أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ
Amma mani istaghna
(நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கிறானோ,
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
Faanta lahu tasadda
அவனை வரவேற்பதில் நீர் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறீர்.
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
Wama AAalayka alla yazzakka
அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உம் மீது ஒரு குற்றமும் இல்லை(யே)!
وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ
Waamma man jaaka yasAAa
எவர் (தானாகவே) உம்மிடம் ஓடி வருகிறாரோ,
وَهُوَ يَخْشَىٰ
Wahuwa yakhsha
அவர்தான் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர்.
فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
Faanta AAanhu talahha
எனினும், நீர் அவரை அலட்சியம் செய்து விடுகிறீர்.
كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌ
Kalla innaha tathkira
அவ்வாறு செய்யாதீர். (திரு குர்ஆனாகிய) இது ஒரு நல்லுபதேசம்தான்.
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
Faman shaa thakarah
எவர் (நேரான வழியில் செல்ல) விரும்புகிறாரோ அவர் இதை(ச் செவியுற்று) ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்.
فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ
Fee suhufin mukarrama
இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) மிக்க கண்ணியமான புத்தகத்தில் (வரையப்பட்டுள்ளது);
مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭ
MarfooAAatin mutahhara
உயர்வுமிக்க தூய்மையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது; (அது) மிகப் பரிசுத்தமானது.
بِأَيْدِى سَفَرَةٍ
Bi-aydee safara
எழுதுபவர்களின் கைகளினால் (வரையப்பட்டது).
كِرَامٍۭ بَرَرَةٍ
Kiramin barara
(அவர்கள்) மிக கண்ணியமானவர்கள், மிக நல்லவர்கள்.
قُتِلَ ٱلْإِنسَـٰنُ مَآ أَكْفَرَهُۥ
Qutila al-insanu ma akfarah
(பாவம் செய்யும்) மனிதனுக்குக் கேடுதான். அவன் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ
Min ayyi shay-in khalaqah
எதைக்கொண்டு (இறைவன்) அவனைப் படைத்திருக்கிறான் (என்பதை அவன் கவனித்தானா)?
مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
Min nutfatin khalaqahu faqaddarah
ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டுதான் அவன் அவனைப் படைக்கிறான். (அவன் இருக்கின்ற இவ்வாறே, அவனை மனிதனாக அமைத்து) அவனுக்குச் சக்தியைக் கொடுத்தான்.
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
Thumma assabeela yassarah
பின்னர், அவன் செய்யக்கூடிய (நன்மை தீமைக்குரிய) வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான்.
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ
Thumma amatahu faaqbarah
பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகிறான்.
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
Thumma itha shaa ansharah
பின்னர் (அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து) அவனே அவனை உயிர்ப்பிப்பான்.
كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ
Kalla lamma yaqdi maamarah
எனினும், நிச்சயமாக மனிதன் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதில்லை.
فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
Falyanthuri al-insanuila taAAamih
மனிதன் தன் உணவை (அது எங்கிருந்து எவ்வாறு வருகிறது என்பதைச்) சிறிது கவனித்துப் பார்க்கவும்.
أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّا
Anna sababna almaasabba
நிச்சயமாக நாமே ஏராளமான மழையை பொழியச் செய்தோம்,
ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّا
Thumma shaqaqna al-arda shaqqa
பின்னர், பூமியையும் பிளந்(து வெடிக்கச் செய்)தோம்.
فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّا
Faanbatna feeha habba
பின்னர், அதிலிருந்து வித்துக்களை முளைத்து வளரும்படி செய்கிறோம்.
وَعِنَبًا وَقَضْبًا
WaAAinaban waqadba
(இவ்வாறு) திராட்சைக் கனிகளையும் மற்ற காய்கறிகளையும்,
وَزَيْتُونًا وَنَخْلًا
Wazaytoonan wanakhla
ஜைத்தூனையும், பேரீச்சை மரத்தையும்,
وَحَدَآئِقَ غُلْبًا
Wahada-iqa ghulba
கிளைகள் அடர்ந்த தோப்புகளையும்,
وَفَـٰكِهَةً وَأَبًّا
Wafakihatan waabba
கனிவர்க்கங்களையும், புற்பூண்டுகளையும்,
مَّتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ
MataAAan lakum wali-anAAamikum
உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும், பயனளிக்குமாறு (முளைக்க வைக்கிறோம்).
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
Fa-itha jaati assakhkha
(உலக முடிவின்பொழுது செவிகளை) செவிடாக்கும்படியான (பயங்கரச்) சப்தம் ஏற்படுமாயின்,
يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ
Yawma yafirru almaro min akheeh
அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான்,
وَأُمِّهِۦ وَأَبِيهِ
Waommihi waabeeh
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்,
وَصَـٰحِبَتِهِۦ وَبَنِيهِ
Wasahibatihi wabaneeh
தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (ஓடுவான்).
لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
Likulli imri-in minhum yawma-ithinsha/nun yughneeh
அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும்.
وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ
Wujoohun yawma-ithin musfira
எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாகவும்,
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ
Dahikatun mustabshira
சந்தோஷத்தால் சிரித்தவையாகவும் இருக்கும்.
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ
Wawujoohun yawma-ithin AAalayhaghabara
அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும்.
تَرْهَقُهَا قَتَرَةٌ
Tarhaquha qatara
கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்).
أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ
Ola-ika humu alkafaratu alfajara
இவர்கள்தான் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள்.